மீதி 90% இன்னைக்கு சொல்லுவாரா ஓபிஎஸ்? என்ன குண்டு வரப்போகுதோ.. பீதியில் சசிகலா குடும்பம்
ஓ.பன்னீர்செல்வம் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றி அமைக்கக் கூடிய பல விஷயங்களை ஓபிஎஸ் இன்று பேச இருக்கிறார் என மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார். இதனால் என்ன குண்டு வரப்போகிறதோ என சசிகலா குடும்பத்தினர் பீதியடைந்துள்ளார்.
சசிகலாவுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7 ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியானம் மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இது வெறும் 10 சதவீதம் தான் என்றும் இன்னும் சொல்ல வேண்டியது 90% இருக்கும் என்றும் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
ஜெயலலிதா பிறந்த நாளில் ஒ.பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றார். இதற்காக செய்தியாளர்களை சந்திக்கும் அவர் வரலாற்றில் மாற்றி அமைக்கக் கூடிய பல விஷயங்களை கூறப்போவதாக தெரிவித்துள்ளார்.

என்ன சொல்லப் போகிறார் ஓபிஎஸ்
மாஃபா பாண்டியராஜனின் இந்த அறிவிப்பால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் இன்று ஓபிஎஸ் வெளியிடப் போகும் செய்தி என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

என்ன குண்டு வரப்போகுதோ
ஓபிஎஸ் 10 சதவீத உண்ணமைகளைச் சொன்னதற்கே அதிமுக இரண்டாக உடைந்து போயுள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் என்ன குண்டை போடப் போகிறார் என சசிகலா குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர்.

மீதி 90% இன்னைக்கு சொல்லுவாரா?
எஞ்சிய 90 சதவீத உண்மைகளையும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சொல்லப்போகிறாரா அல்லது புதிய கட்சி போன்ற வேறு ஏதேனும் அறிவிப்புகளா என்றும் கேள்வி எழுந்துள்ளது. வரலாற்றை மாற்றக் கூடிய அந்த அறிவிப்புகள் என்ன என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications