சட்டவிதிகளை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்… மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
சட்டவிதிமுறை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழர்களின் கலாச்சார சின்னமான ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள சட்டவிதிமுறை நீக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டு நடத்த இடையூறாக உள்ள சட்டவிதிகளை நீக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பண்டிகை நெருங்குவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கலுக்கு ஒரு வாரமே உள்ளதால் உடனடியாக நடவடிக்கையை தேவை என்றும் குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், தமிழக மக்களின் உணர்வு, ஆதரவை உணர்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான அவசரக் சட்டத்தை பிறப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மோடியிடம் கோரியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் கலாச்சாரத்துடனும் சமயத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறியுள்ள முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது தமிழக மக்களுக்கு கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காட்சிப்படுத்த தடைவிதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து காளையை நீக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications