எலும்புகளுக்கு சக்தி தர கூடிய நாகர்கோவில் சிப்ஸ்..!!

Subscribe to Oneindia Tamil

தமிழக மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான ஊர் தான் நாகர்கோவில். எந்த ஊரில்லும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஊருக்கு உள்ளது. ஸ்ரீ நாகராஜாவின் திருகோயில் இங்கு தான் அமைந்துள்ளது, அதனால்தான் நாகர்கோவில் என அழைக்கபடுகிறது. மற்றொரு சிறப்பு, இந்த ஊரில் தயாரிக்கப்படும் சுத்தமான மொறு மொறு நேந்திரம் சிப்ஸ்.

ஆனால் இந்த சிப்சுக்கெல்லாம் பாஸ் இந்த நாகர்கோவில் சிப்ஸ் தான். இங்கே சிப்சை ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி வருகின்றன. இதை உண்டால் எந்த விதமான உடல் உபாதைகள் வராது. அவ்வளவு சுத்தமாகவும், நேர்த்தியாகவும், தரமான பொருட்களாலும் தயாரிக்கப்படும் இந்த நாகர்கோவில் சிப்ஸ் ஒரு வகையான இயற்க்கை மருந்த என்றே சொல்லலாம். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அவர்கள் நிலத்திலே விளயவைத்து, அறுவடை செய்து, பக்குவமான நிலையில் இருந்து இந்த சிப்சை தயாரிக்கின்றனர்.

Order Nagarcovil Chips Online and get delivered in less than 24 Hours

நாகர்கோவில் நேந்தரம் சிப்ஸ்:

நேந்தரம் சிப்ஸ் என்றால் ஒன்றும் பெரிது அல்ல, அது வாழைப்பழம் சிப்ஸ் தான். வாழைப்பழத்தில் பல வகை உண்டு, அதில் நேந்தரம் என்ற ஒன்று தான் தலை சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு பழம். இந்த பழத்தை உண்டால் உடலில் பல வியாதிகள் குணமாகும் மற்றும் அது மருத்துவ ரீதியாகவும் நிரூபணமான உண்மை.

நாகர்கோவில் சிப்ஸ் செய்முறை:

தேவையான பொருட்கள்

நேந்தரம் பழம் : 3
மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
உப்பு கரைத்த தண்ணீர் : 1 ஸ்பூன் உப்பு / 1/2 கப் தண்ணீர்
தேங்காய் எண்ணெய் : தேவையானா அளவு

செய்முறை:

ஒரு பத்திரத்தை எடுத்து அதில் மஞ்சள் தூளை தண்ணீரில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கலந்த பின்னர், நேந்தரம் பழத்தை மட்டும் தோல் எடுத்து அந்த பத்திரத்தில் உள்ள கலவையில் சுமார் 5 நிமிடத்திற்கு மிகை இல்லாமல் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த பிறகு அந்த நேந்தரம் பழம் மஞ்சள் நிறத்தை அடையும். அந்த மஞ்சள் நிறத்தை அடைந்தவுடன், அதை எடுத்து சிப்ஸ் செதுக்கிற கட்டையில் வைத்து மெலிதாக செதுக்க வேண்டும். இதை டிஷ்யு அல்லது ஒரு வெள்ளை துணியில் உலர்த்திகொள்ளலாம். பிறகு ஒரு அடி கனமான பத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணையை ஊற்றி ஒரு ஒரு துண்டுகளாக போடவும்.

அது பொரிக்க ஆரம்பிக்கும் பொது, அதில் நீங்கள் உப்பு கலந்த அந்த தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக பொறித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான நாகர்கோவில் சிப்ஸ் தயார்.

நாகர்கோவில் சிப்ஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:

நாகர்கோவில் சிப்ஸ் உண்பதால் உங்கள் மனச்சோர்வு குறையும், புத்தி கூர்மை அதிகரிக்கும், மலச்சிக்கள் ஏற்படாது, உங்கள் மேனி பொலிவடையும், மற்றும் இதில் அதிக அளவில் வைட்டமின் பி இருப்பதால் உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி ஏற்ப்படும். அது மட்டும் அல்லாமல் எலும்புகளுக்கு சக்தி தரக்கூடிய ஒரு உன்னதமான உணவுப்பண்டம்.

இந்த சிப்ஸ் தேங்காய் எண்ணையில் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும்.தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+