தனியார் காப்பகத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது 6 பேர் தலைமறைவு
திருப்பூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தனியார் காப்பக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகவுள்ள, மீதமுள்ள 6 குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள அழகுமலையில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 70-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.
சமீபத்தில் இக்காப்பகத்தில் உள்ள 13 வயது சிறுமி ஒருவர், தனக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை தருவதாக திருப்பூர் குழந்தைகள் நலக்குழுவினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமி தங்கியிருந்த தனியார் காப்பகத்தின் செயல் இயக்குநர் வியாக்குலமேரி, இயக்குநர் அலோசியஸ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பயந்து தலைமறைவானார்கள். அவர்களைப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நிலக்கோட்டையில் 2 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த காப்பக ஊழியர்களான மணிகண்டன், வேல்முருகன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்த பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார், தலைமறைவாகவுள்ள மீதமுள்ள ஆறு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications