ஆறுதல் கூறிய ரஜினி, மேனகாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்
சென்னை: சிறையில் இருந்து வெளியே வந்த தனக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதினார். அதில் அவர், மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்றிருந்தார்.
ரஜினி தவிர பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான மேனகா காந்தியும் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பி வாழ்த்தினார்.

மேனகா
மேனகா தனது கடிதத்தில், இப்படி நடந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். இந்த பிரச்சனை அனைத்தும் தீர்ந்து நீங்கள் மீண்டும் நிர்வாகம் செய்வீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

நன்றி கடிதம்
தன் மீது அக்கறை காட்டி கடிதம் எழுதிய ரஜினி மற்றும் மேனகாவுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஆயுள்
ஜெயலலிதா ரஜினிகாந்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, உங்கள் கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்களின் அன்புக்கு மிகவும் நன்றி. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் வெற்றிகளை அளிக்க நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பிசி
மத்திய அமைச்சராக பிசியாக இருக்கும் போதிலும் என்னை பற்றி நினைக்க நேரம் ஒதுக்கி எனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி என ஜெயலலிதா மேனகாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications