பல மாவட்டங்களில் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்- கர்நாடக அரசு பஸ்களும் ரத்து
நெல்லை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளியூருக்கு இரவில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மாலை 5 மணிக்கு மேல் பஸ்களின் இயக்கம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விஷமிகள் பஸ்களுக்குத் தீவைப்பது, தாக்குவது போன்றவற்றில் ஈடுபடலாம் என்று முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை போக்குவரத்துத் துறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இரவில் இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடகத்திற்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இதையடுத்து அதிமுகவினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பேருந்துகளும் நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கண்ட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!











Click it and Unblock the Notifications