கோவையில் குட்கா குடோன் உரிமையாளர் கைது.. சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து குட்கா எடுக்க முயற்சி
குடோனை உடைத்து குட்கா எடுக்க முயற்சி செய்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை: சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து ஒன்றரை டன் குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயற்சித்த குடோன் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் அருகே கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த 2-ம் தேதி ஒரு வீட்டில் ஒன்றரை டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டினை சீல் வைத்த அதிகாரிகள், மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்த ஷர்வன்குமார் என்ற வடமாநில இளைஞர் தப்பியோடிய நிலையில், வீட்டின் உரிமையாளர், குட்கா வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ஒரு கும்பல் சீல் வைக்கப்பட்ட வீட்டில் நுழைந்து குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயற்சித்துள்ளது. அப்போது அவ்வழியே ரோந்து பணிக்காக வந்த செல்வபுரம் காவல் துறையினர் அக்கும்பலை பிடித்து விசாரித்துள்ளது.
அதில் அசோக் என்பவர் குடோன் உரிமையாளர் என்பதும், காசிவிசுவநாதன், சலீம், அஸ்ரப், சுரேஷ், பாபு ஆகியோர் சுமை துக்கும் பணியாளர்கள் என்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் குட்கா குடோன் உரிமையாளர் அசோக்கினை.கைது செய்த காவல் துறையினர், மற்ற 5 பேரை விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications