"மறைந்தவர் அமரர் என்பதால் வாஜ்பாய் பற்றி பேசவில்லை": ப.சி-ன் வாய்தவறிய பேச்சு
திருச்சி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி பொதுக்கூட்டத்தில் வாய்தவறி பேசிய பேச்சு இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
திருச்சி புத்தூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாரதிய ஜனதாவையும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மதச்சார்பின்மையைக் காக்க பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நடக்கும் மகாபாரதப் போர் என்றும் கூட வர்ணித்திருக்கிறார்.

அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம், நரேந்திர மோடியை மட்டுமல்ல, வாஜ்பாயையும் என்னால் ஏற்க முடியாது. மோடியை விட வாஜ்பாய் நல்லவர், பண்பாளர், நேர்மையானவர் என்பதால் அவரை ஏற்கலாம். மறைந்தவர் அமரர் என்பதால் வாஜ்பாய் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று திடீரென பேசினார்.
ப.சிதம்பரம் வாய்தவறி பேசியிருந்தாலும் ஒருநாட்டின் நிதி அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் முன்னாள் பிரதமர் உயிருடன் இருக்கும் போது மறைந்துவிட்டார் என்று பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications