காந்தி நகர் சாலைக்கு பா ராமச்சந்திர ஆதித்தன் பெயர்!- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மறைந்த பத்திரிகை அதிபர், ஆசிரியர் பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலைக்கு, 'பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற பணியாற்றியவர் பா.இராமச்சந்திர ஆதித்தன் ஆவார். பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளியிட்டதன் மூலம் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை அவர் பெற்றிருந்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்கும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
பத்திரிகை உலகில் தனி இடத்தை பெற்றிருந்த பா.இராமச்சந்திர ஆதித்தன் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.
மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் தனது தந்தை பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-ஆவது பிரதான சாலைக்கு, அன்னாரது பெயரை சூட்டிட வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்று அடையாறு காந்தி நகர், 4-ஆவது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சென்னை மாநகர மேயர் அவர்களுக்கு உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் 3.8.2015 அன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.இராமச்சந்திர ஆதித்தன் நினைவைப் போற்றும் விதமாக, அடையாறு காந்தி நகர், 4-ஆவது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என பெயர் மாற்றம் செய்வதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலை பெயர் பலகையை நான் விரைவில் திறந்து வைப்பேன்."
-இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications