போராட்டம் நடத்துவதில் தவறில்லை- ரஜினிக்கு பா ரஞ்சித் பதில்
சிலவற்றுக்கு போராட்டம் நடத்திதான் உரிமைகளை பெற வேண்டியுள்ளது என்று ரஜினிக்கு பா ரஞ்சித் பதிலடிக் கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்றும் உரிமைகளை பெற சிலவற்றுக்கு போராட்டம் நடத்திதான் ஆக வேண்டும் என்றும் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திப்பதற்காகவும் ரஜினி தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டம் மட்டுமே தீர்வாகாது. எல்லாவற்றிற்கும் போராடுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதுபோல் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் போராட்டம் போராட்டம் என்று போராடிக் கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ரஜினியை வைத்து படம் இயக்கும் பா ரஞ்சித் கூறுகையில் போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல.
போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார் என்றார் பா. ரஞ்சித்.
இவர் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், நெடுவாசல், மீத்தேன் திட்டம், ஜாதிய படுகொலைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணம் உள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications