என் தாத்தா அதிமுக.. அப்பா பக்கா திமுக.. எனக்கு கருணாநிதி மீது விமர்சனம் உண்டு.. பா. ரஞ்சித்
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் பார்த்து வியந்த தலைவர் கருணாநிதிதான் என்று இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி கலை வணக்கம் என்ற புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில் சிறு வயதிலிருந்து கருணாநிதியை எனக்கு தெரியும். அவர் பெரியபாளையம் வழியாக செல்லும் போது பார்த்திருக்கிறேன். என்னுடைய அப்பா பக்கா திமுக.

படங்களுக்கு என்னை
எங்கள் வீட்டு வாயிலை கூட உதயசூரியன் வடிவில் அமைத்திருந்தார். என்னுடைய தாத்தாவோ அதிமுக காரர். ஆனால் கருணாநிதியின் கலையுலக ரசிகர். அவர்தான் பராசக்தி உள்ளிட்ட படங்களுக்கு என்னை அழைத்து சென்றார்.

கைப்பற்றுதல்
இந்த படம் எனக்கு முக்கியமான வழிகாட்டியாக இருந்தது. திமுக மக்களிடம் பரவலாக செல்ல காரணம் என்ன என யோசித்த போதுதான் அவர்கள் கலை, பண்பாடு சார்ந்த எல்லாவற்றையும் கைப்பற்றியிருக்காங்கன்றது தெரியவந்தது.

ஒரே ரத்தம்
எடுத்தவுடனேயே ஆட்சியை பிடிக்க அவர்கள் நினைக்கவில்லை. கலையின் வாயிலாக மக்களின் பிரச்னைகளை பேசியிருக்கிறார்கள். திரைப்படங்களின் வாயிலாக தனது கொள்கைகளை பேசி ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். மிகமுக்கியமான திரைப்படமாக நான் கருணாநிதியின் ஒரே ரத்தத்தை பார்க்கிறேன்.

ரஜினிக்கு பிடிக்கும்
அன்றையை கால கட்டத்தில் சாதி, மத பிரிவினையை மிகத் தீவிரமாக பேசிய படம். அந்தப் படத்தின் வசனங்களை நான் கேட்கும் போது நான் எழுதும் வசனங்கள் ஒன்றுமே இல்லை. உண்மையில் எனக்கு கருணாநிதி மீது விமர்சனங்கள் இருக்கிறது. அதைப் பேசுவதற்கான மேடை இது அல்ல. ரஜினிகாந்த் என்னிடம் கூறும்போது, எனக்கு பிடித்த, நான் பார்த்து வியந்த தலைவர் கருணாநிதிதான் என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் செய்ய வேண்டும்
சாதி முறைகளை ஒழிக்க கூடிய சக்தி கொண்ட கட்சிகளில் திமுகவும் ஒன்று என நான் நம்புகிறேன். மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டமும், சமத்துவபுரம் திட்டமும் கருணாநிதியின் கனவாகும், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications