ரூ75 கோடி டெபாசிட் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மோசடி வழக்கில் பச்சமுத்துவுக்கு ஜாமீன்!
சென்னை: 111 பேரிடம் ரூ.74.39 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கில் எஸ்.ஆர்.எம்.குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினமும் காலை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
மருத்துவ சீட் தருவதாக கூறி 111 மாணவர்களிடம் ரூ.74.39 கோடி மோசடி செய்த புகாரில் பச்சமுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். ரூ.75 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் செய்வதாக ஜாமீன் வழக்கு விசாரணையின் போது பச்சமுத்து தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.

அந்த மனுவை சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் பச்சமுத்து சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ரூ.75 கோடியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் எனவும் 15 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். மறுஉத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரியிடம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் பச்சமுத்துவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications