திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் மனு !
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முதல் ஆளாக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: தேர்தல் மன்னன் பத்மராஜன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன். கடந்த 27 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், லோக்சபா, சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். தொடக்கத்தில் பஞ்சர் கடை நடத்திய இவர், பின்னர் சிறிய டயர் தொழிற்சாலைக்கு உரிமையாளரானார். சாதனை முயற்சிக்காக தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் பத்மராஜன். ஆனால் இதுவரை தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வரும் பத்மராஜன், லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறையும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான பதிவையும் ஏற்படுத்தியுள்ளார். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாக கொண்டுள்ளார்.
தற்போது திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் மன்னன் பத்மராஜன் மதுரை திருநகரிலுள்ள தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை முதல் மனுவைத் தாக்கல் செய்தார். இவரது மனுவைத் தொகுதியின் தேர்தல் அலுவலரான ஜீவா பெற்றுக் கொண்டார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ஜனநாயக நடைமுறையில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கு நானே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறேன். திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவோடு சேர்த்து இதுவரை 177 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். நான்கு முறை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டேன் என பெருமையுடன் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications