காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய பின்பு திருமணம் செய்த பெயிண்டர்
ஆம்பூர்: ஆம்பூரில் காதலியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பெயிண்ட்டர் அப்பெண்ணுக்குத் தாலி கட்டினார்.
அணைக்கட்டு அடுத்த வரதலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நதியா. அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி பெயிண்டராக உள்ளார்.
சத்தியமூர்த்தி, நதியா இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சத்தியமூர்த்தி அடிக்கடி நதியாவிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
தற்போது நதியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியமூர்த்தியிடம், நதியா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்தார்.
மேலும் வேலை விஷயமாக சில மாதங்களாக சத்தியமூர்த்தி கேரளாவுக்கு சென்று வந்துள்ளார். அவரை நதியா போனில் தொடர்பு கொள்ள முயன்றால் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து நதியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது.அதன்படி நேற்று ஊருக்கு வந்த சத்தியமூர்த்தியிடம், நதியாவை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்தார்.
இது குறித்து நதியா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நியைலத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் வேணியம்மாள் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது இருதரப்பினரை சேர்ந்த பெற்றோர், உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
மேலும் சத்தியமூர்த்தியிடம் விசாரித்த போது அவர் நதியாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து போலீசார், உறவினர்கள் முன்னிலையில் ஆம்பூர் இந்து மேல்நிலைபள்ளி அருகே உள்ள விநாயகர் கோவிலில் நதியாவின் கழுத்தில் சத்தியமூர்த்தி தாலி கட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications