பிரஷ்,பென்சில் இல்லாமல்..இலவச பயண டிக்கெட்டால் உருவான முதல்வர் ஓவியம்! கள்ளக்குறிச்சி ஓவியர் அசத்தல்
கள்ளக்குறிச்சி : திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்ட வெற்றியை குறிக்கும் வகையில் பயணச் சீட்டுக்களை கொண்டு முதல்வரின் ஓவியத்தை வரைந்து கள்ளகுறிச்சியைச் சேர்ந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஒருவர் அசத்தியுள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக மணலூர்பேட்டையை சேர்ந்த சு.செல்வம் பணியாற்றி வருகிறார்,
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையிலும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்பதை விளக்கும் வகையிலும் பேருந்து பயணச் சீட்டை கொண்டு முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்தார்.

ஓராண்டு சாதனை
தமிழ்நாடு அரசின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றான மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் ஆகும். இந்த மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தால் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். இந்த இலவச மகளிர் பேருந்து பயணம் திட்டத்தை விளக்கும் வகையிலும், திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையிலும் இந்த ஓவியத்தை வரைந்ததாக சொல்கிறார் செல்வம்.

பஸ் டிக்கெட்
பிரஷ் பயன்படுத்தாமலும், பென்சில் பயன்படுத்தாமலும், வெறும் இலவச மகளிர் பேருந்து "பயணச்சீட்டாலேயே" கருப்பு வண்ண பவுடரில்அந்த இலவச பேருந்து பயண சீட்டை தொட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை 15 நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்துள்ளார்.

பொதுமக்கள் பாராட்டு
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் குறிப்பாக மகளிர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். அது மட்டும் அல்லாமல் படம் வரைந்த ஓவியாசிரியர் செல்வத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.

கயிற்றால் ஓவியம்
இந்த ஓவியத்தை மட்டுமல்ல, ஓவியர் செல்வம் அவர்கள் தன்னுடைய ஓவியத் திறமையால் புதுமையான முறையில் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கைகளை கயிறால் கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதும் கயிற்றால் சுற்றி சுற்றி வளைத்து கட்டிக்கொண்டு மீதம் ஒரு பகுதி கயிறை தன் வாயால் கவ்விக்கொண்டு, வாயில் இருக்கும் கயிற்றை நீர்வண்ணத்தில் தொட்டு 20 நிமிடங்களில் நடிகர் அஜித் குமார் உருவத்தை வரைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications