இந்தியக் குடியுரிமையை போலியாகப் பெற்ற பாகிஸ்தான் பெண்- விழுப்புரத்தில் கைது
விழுப்புரம்: தமிழ்நாட்டில் வசிப்பதற்காக போலி ஆவணம் தயாரித்து இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண் ஒருவர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் காலித் அப்துல்லா. இவர் பாகிஸ்தானில் டிரைவராக பணிபுரிந்த போது, கராச்சியைச் சேர்ந்த ஹவாபீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஹவாபீயை விட்டுவிட்டு 1985இல் காலித் மட்டும் இந்தியா திரும்பியுள்ளார். பின்னர், 1990இல் ஹவாபீ பாகிஸ்தான் குடியுரிமையுடன் இந்தியா வந்து காலித்துடன் வாழ ஆரம்பித்துள்ளார்.
இத்தம்பதியினர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாமந்தலில் குடியேறிய போது, தன்னுடைய பெயரில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை போலியாக பெற்று, ஹவாபீ இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் குடியுரிமையும் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார்.
ஹவாபீ போலி ஆவணங்கள் தயாரித்து 2 நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹவாபீ மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஹவாபீ கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஒப்படைத்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications