பழனியில் 2 ஆட்டோ டிரைவர்கள் வெட்டிக் கொலை!
பழனி: பழனியில் ஆட்டோ டிரைவர்களான இரண்டு பேர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பழனி பாரதி நகரை சேர்ந்தவர் உதயகுமார். பழனி அடிவாரம் குரும்பப்பட்டி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் பாலாஜி. நண்பர்களான இவர்கள் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
நேற்று இரவு பாரதி நகரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இவர்கள் பழனி அடிவாரம் ரோடு தேவர் சிலை முன்பு தனியார் விடுதியில் உள்ள பாருக்கு சென்றனர். அங்கு 3 பேரும் மதுகுடித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே 3 பேரும் வெளியே வந்து எட்டிப்பார்த்தனர். அந்த சமயம் மர்மநபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள் வைத்து இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் உதயகுமார், பாலாஜி, சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.
உயிர் பிழைக்க அலறியடித்தவாறு ரத்தம் சொட்ட, சொட்ட தலைதெறிக்க அவர்கள் ஓடினர். ஆனாலும் அந்த கொலைவெறி கும்பல் அவர்களை விடவில்லை.
3 பேரையும் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் உதயகுமார், பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். சதீஷ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இந்த இடம் ஆட்கள் நடமாட்டம் மிகுதியான பகுதியாகும். கொலை நடந்த 30 நிமிடத்திற்கு முன்பு தான் இந்த பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்து முடிந்தது. இதனால் பக்தர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
இருட்டில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களும், பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது.
தகவல் அறிந்ததும் பழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலையுண்ட 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் நண்பர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவரை அதே பகுதியை சேர்ந்த துர்க்கையன், பூபாலன், செந்தில் மற்றும் சிலர் கத்தியால் குத்தினர். இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு விஷயமாக கடந்த 8 மாதமாக நடந்து வரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பூபாலன் தரப்பினர் உதயகுமார், பாலாஜி, சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பூபாலனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications