பழனி முருகன் கோயில் உண்டியலில் தவறிவிழுந்த தங்க சங்கிலி! கதறிய ஏழை பக்தர்! நெகிழ வைத்த சந்திரமோகன்!
பழனி: பழனி முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த தங்க செயினை திருப்பி கேட்ட பக்தருக்கு திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் என்ன செய்தார் தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் உள்ளது. இது அறுபடை வீடுகளில் ஒன்று. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்ல ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோயில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த கோயில் எப்படி உருவானது என்றால் ஒரு நாள் கைலாயத்தில் பரமசிவனுக்காக ஞானபழத்தை நாரதர் கொண்டு வந்தார். அப்போது அன்னை பராசக்தியோ அந்த பழத்தை தனது குழந்தைகளான விநாயகருக்கும் முருகனுக்கும் பகிர்ந்து அளிக்க விரும்பினார்.
தாயின் குணம் அதுதானே! ஆனால் தந்தை பரமசிவனோ அந்த பழத்தை பகிர்ந்து கொடுத்தால் அதன் தனித்தன்மை போய்விடும் என்பதால் இருவருக்கும் போட்டியை வைத்து அதில் வெல்வோருக்கே பழம் என்றார். இந்த உலகயே யார் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த பழம் என்றார். உடனே முருகனோ தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு உலகை சுற்ற புறப்பட்டார்.
ஆனால் விநாயகனோ என் தாய் தந்தையே உலகம் என கூறி அவர்களை வலம்வந்து ஞான பழத்தை பெற்றார். உலகை சுற்றி வந்து பழம் கிடைக்கும் சந்தோஷத்தில் வந்த முருகனுக்கு ஏமாற்றம் விஞ்சியது. இதனால் கோபித்துக் கொண்டு அனைத்தையும் துறந்து வந்த இடம்தான் பழனிமலை என்ற வரலாறு உண்டு. பழனி தண்டாயுதபாணியை பார்க்க நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.
இங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி, சொத்து பத்திரங்கள், ரூபாய் நோட்டுகள், காசுகள், நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் என இருக்கும். அந்த வகையில் கோயில் உண்டியலில் தவறுதலாக கேரள பக்தரின் 2 பவுன் தங்க சங்கிலி விழுந்துவிட்டது. இதை அவர் கோயில் நிர்வாகத்திடம் திருப்பி கேட்டார். அப்போது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதிபடி கார்திகா பள்ளி வீட்டைச் சேர்ந்தவர் சசிதரன் பிள்ளை மகள் சங்கீதா. இவர் பழனி முருகன் கோயிலுக்கு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வந்திருந்தார். கோயில் உண்டியலில் தன் கழுத்தில் இருந்த துளசி மாலையை காணிக்கையாக செலுத்திய போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியையும் சேர்த்து உண்டியலில் போட்டுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் சங்கீதா முறையிட்டார். இதையடுத்து கோயில் நிர்வாகம் கண்காணிப்பு கேமரா மூலம் அவர் நகை உண்டியலில் விழுந்தது உண்மைதானா என நிர்வாகத்தின் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர். ஆனால் 1975 ஆம் ஆண்டு உண்டியல் சட்டத்தின்படி, உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்கப்படமாட்டாது.
கோயில் உண்டியலில் விழுந்து விட்டால் அது கோயிலுக்குத்தான். இது போல் நாம் சில படங்களில் கூட பார்த்திருப்போம். கோயில் உண்டியலில் காணிக்கை போடும் போது குழந்தை தவறி விழுந்துவிடும். உடனே தாய் குழந்தையை மீட்க போராடுவார். ஆனால் கோயில் நிர்வாகம் அந்த குழந்தையை கொடுக்கமாட்டார்கள். அதை தெய்வக் குழந்தை என கூறி கோயிலிலேயே வளர்ப்பார்கள்.
இந்த சங்கீதா ஏழை பக்தர். இவருக்கு அந்த செயின் என்பது அத்தியாவசியமானது. இதனால் அவருடைய ஏழ்மை நிலையை அறிந்த கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், தனது சொந்த செலவில் ரூ 1 லட்சம் மதிப்பில் 17.460 கிராம் எடை கொண்ட தங்க செயின் அவருக்கு வழங்கப்பட்டது. சங்கீதாவை கோயிலுக்கு வரவழைத்து அந்த நகையை கொடுத்தார் சந்திரமோகன்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications