நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர்... நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்றனர்
சென்னை: நேற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினர் என அழைக்கப்படும் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் பதவியேற்பு விழாவைக் கூட நடத்தாத பாண்டவர் அணியினர் முதல் காரியமாக சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க நிலத்தை ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை அறிந்ததும் ஏராளமான ஊடகங்கள் அந்த இடத்தில் குவிந்தன இதனால் அந்த இடமே சற்று பரபரப்பாக காட்சியளித்தது.பின்னர் தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள தற்காலிக நடிகர் சங்க கட்டிடத்திற்கு சென்ற பாண்டவர் அணியினர் அங்கு தங்கள் பதவிகளை எளிமையாக ஏற்றுக் கொண்டனர்.

நடிகர் சங்கத் தேர்தல்
நேற்று நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் சரத்குமார் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றனர். மொத்தம் உள்ள 29 இடங்களில் 25 இடங்களை விஷால் அணியினர் கைப்பற்றினர். சரத்குமார் அணியிலிருந்து 4 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சங்க நிலம்
இன்று பாண்டவர் அணியினர் அனைவரும் சற்று முன்னர் 3.30 மணியளவில் தியாகராய நகரில் அமைந்திருக்கும் நடிகர் சங்க நிலத்தை ஆய்வு செய்தனர். கட்டிடம் கட்டுவது தொடர்பான ஆலோசனையில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், நந்தா, எஸ்.வி.சேகர் மற்றும் கோவை சரளா ஆகியோர் ஈடுபட்டனர்.

விஷாலைத் தூக்கி
ஆய்வு நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த இயக்குநர் எஸ்.வி.சேகர் தேர்தலில் வென்ற அனைவரையும் கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒரே சமயத்தில் விஷால், கார்த்தி மற்றும் நாசர் ஆகியோரை தோளில் தூக்கி வைத்து நடிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடிகர் சங்கம்
பதவியேற்பு விழாவைக் கூட நடத்தாத நிலையில் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பாக விஷால் அணியினர் இடத்தை ஆய்வு செய்தது திரையுலகில் வியப்பு கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் செய்வதை வைத்துப் பார்க்கும்போது விரைவில் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படும் என்ற நம்பிக்கை திரையுலகில் எழுந்திருக்கிறது.

பதவியேற்பு
தொடர்ந்து தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள தற்காலிக நடிகர் சங்க கட்டிடத்திற்கு சென்ற பாண்டவர் அணி அங்கு தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். விஷால் பொதுச்செயலாளர் பதவியையும், நாசர் தலைவர் பதவியையும், கார்த்தி பொருளாளர் பதவியையும் ஏற்றுக் கொண்டனர்.பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் துணைத்தலைவர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். மேலும் பாண்டவர் அணியைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.மொத்தம் உள்ள 29 இடங்களில் 25 இடங்களை விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நாசர் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

பெயர் மாற்றம்
நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக பதிரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது இதனை உடனடியாக முடிவு செய்ய முடியாது. உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து இது தொடர்பான முடிவை எடுப்போம் என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்
இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மற்றும் அவரது தலைமையிலான தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications