ஆட்சியை கைப்பற்றுவது எப்படி.. மூத்த வழக்கறிஞருடன் ஓபிஎஸ் ஆதரவு பாண்டியராஜன் அவசர ஆலோசனை
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் மாஃபா பாண்டியராஜன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை: ஓபிஎஸ் ஆதரவு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
ஓபிஎஸ் ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக சசிகலா ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுநர் அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனிடையே சசிகலா சிறையும் சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பிற்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சி
தொடக்கத்தில் சசிகலாவை ஆதரித்த மாஃபா பாண்டியராஜன் பின்னர் ஓபிஎஸ் அணிக்கு தாவினார். இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாண்டியராஜன் மூத்த வழக்கறிஞருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆளுநர் முடிவு
10 நாட்களாக இழுபறியில் இருந்த ஒரு பிரச்சனைக்கு இன்று முடிவு கிடைத்திருக்கிறது. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியையும் அழைக்காமல் தாமதம் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நேற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 10 நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு ஆளுநர் ஒரு முடிவு கட்டியுள்ளார்.

அவசர ஆலோசனை
ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை அழைத்த உடன், ஓபிஎஸ் ஆதரவு மாஃபா பாண்டியராஜன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரைந்தார். அங்கு மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அவருடன் ஓபிஎஸ் அணிக்கு மாறிய செம்மலையும் சென்று ஆலோசனையில் பங்கேற்றார்.

ஓபிஎஸ்ஸுக்கு மாற்று வழி என்ன?
ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், ஓபிஎஸ் ஆட்சி தொடர என்னென்ன வழிவகைகள் இருக்கிறது என்பது குறித்தும் மாற்று வழிகள் என்ன என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திவிட்டு மாஃபா பாண்டியராஜன் சென்றார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications