போயஸ் கார்டனில் ஜெ.படத்திறப்பு மட்டும் தான்...பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னையன்
போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாதான் நடந்ததாக பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா படத்தைத் திறந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
போயஸ் கார்டன் பங்களாவில் அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலாவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விவாதம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் என்ன நடக்கிறது என்ற ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது.

சசிகலா முதல்வராக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் பன்னீர்செல்வம் தமது பதவியை ராஜினாமா செய்வது குறித்து சசிகலாவுடன் விவாதித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலா அடுத்தது முதல்வர் பதவியை குறி வைத்துள்ளார். இதனால் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து சசிகலாதான் முதல்வர் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதில் உச்சகட்டமாக அதிமுக கொள்கை பரப்பு செயலரும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, ஆட்சியும் கட்சியும் ஒருவரிடம்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென போயஸ் கார்டன் பங்களாவுக்கு பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் மணிகண்டன், தங்கமணி ஆகியோரும் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா படத்தைத் திறந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி..க்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர் எனக் கூறியுள்ளார். இதனால் 2 மணிநேரமாக நீடித்த பரபரப்பு அடங்கியது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications