தமிழ் புத்தாண்டுக்கே வாழ்த்து தெரிவிக்காத, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்!
சென்னை: தமிழ் புத்தாண்டுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம், வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், இதுவரை ஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்தார்.

ஆனால், ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்து சென்னையில் வசிக்கும் நிலையில், பன்னீர்செல்வம் வாழ்த்து சொல்வதை தவிர்த்து வருகிறார். அதற்கு பதிலாக ஜெயலலிதாதான் வாழ்த்துகளை கூறி வருகிறார்.
இதேபோலத்தான், தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், நேற்று ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர், தனது மாநில மக்களின் முக்கிய பண்டிகைக்கு வாழ்த்து கூறவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளதால், அவர் அதில் இருந்து வெளிவரும்வரை, பன்னீர் செல்வம் சோகத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், சம்மந்தப்பட்ட ஜெயலலிதாவே, வாழ்த்து தெரிவித்த நிலையிலும், பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவிக்காதது வியப்புதான்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications