என் மகன் இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார்.. பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி: என் மகன் சம்பத் தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும் தீவிர அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மட்டுமே தான் ஓய்வு பெற்றுள்ளதாகவும், அரசியல் சிந்தனைகளிலிருந்து அல்ல என்றும் தன் சக்திக்கேற்ற அளவில் தமிழ் மக்கள், தமிழக முன்னேற்றத்துக்காக பணிகளைத் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் முன்பு விஜயகாந்த்து ஆலோசகராக இருந்து வழி நடத்தியபோல, வேறு யாருக்காவது அவர் வழிகாட்டியாக மாறத் திட்டமிட்டு வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குல தெய்வம் கோவிலில் வழிபாடு
அரசியலுக்கும், தேமுதிகவுக்கும், எம்.எல்.ஏ பதவிக்கும் முழுக்கு போட்ட பின்னர் பண்ருட்டியை அடுத்துள்ள முத்தாண்டிக்குப்பத்தில் நடந்த உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னர் தனது குல தெய்வம் கோவிலுக்கும் போய் வழிபாடு நடத்தினார்.

செயல்பாடுதான் குறையும்.. சிந்தனை அப்படியே
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது... அரசியலிருந்து ஓய்வு பெறுவது என்பது எனது செயல்பாட்டை குறைத்து கொள்வதாகும். ஆனால் அதே நேரத்தில் அரசியல் சிந்தனையை குறைத்து கொள்ள போவதில்லை. தமிழ்நாட்டின் நன்மைக்கு பயன்படும் வகையில் என் அறிவுக்கு எட்டிய கருத்துக்கள் மக்களின் முன் வைக்கப்படும்.

சக்திகேற்றபடி செயல்படுவேன்
ஓரு அரசியல் இயக்கத்திலிருந்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்க்கிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய மாபெரும் தலைவர்கள் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்நாளை அற்பணித்து பணியாற்றினார்களோ, அதுபோல அவர்களது லட்சிய கனவு நிறைவேறும் வகையில் என் சக்திக்கேற்ற அளவில் பணிகளை தொடருவேன். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வு பெற உறுதுணையாக இருப்பேன்.

இப்போதைக்கு மகன் வர மாட்டார்
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய மகன் சம்பத் தொழிலில் தீவிரமாக இருந்து வருகிறார். இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 3 அணிகள் வரும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3 அணிகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

பாஜகவுடன் சேர திமுக முயற்சிக்கும்
அதேபோல தேசிய அளவிலும், தமிழக அளவிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற திமுக முயற்சிக்கும், கூட்டணிக்கு அது முயலும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications