உடனே மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுங்கள்.. வேல்முருகன்
சென்னை: மக்களைப் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பது என்பது பொதுமக்களுக்கு மீண்டும் பெரும் சுமையாகும். அண்மையில்தான் பால்விலை மிக அதிக அளவு உயர்த்தப்பட்ட நிலையில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதை பொதுமக்களால் ஏற்கமுடியாத ஒன்றாகும்.
வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு தற்போதுள்ள கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3 ஆகவும் 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.2.80-ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.-ல் இருந்து ரூ.4.60 ஆகவும் 500 யூனிட்டுக்கு மேல் இரு மாதங்களுக்கு பயன்படுத்து வோருக்கு ரூ.5.75-ல் இருந்து ரூ.6.60ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால்தான் இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதைவிட தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்தின் தேவைக்கான அளவு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்தால் இத்தகைய சுமைகளை மக்கள் மீது சுமத்த வேண்டியது இருக்காது.
அதே நேரத்தில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோரின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்; 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
பொதுமக்கள் மீது பெரும் சுமையாக ஏற்றப்பட்டிருக்கும் இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications