எதிர்ப்பு எதிரொலி.. டெல்டா மாவட்டங்களிலிருந்து துணை ராணுவ படை வாபஸ்!
டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Recommended Video

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த ராணுவ படை வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். முக்கியமாக போராட்டம் அதிகம் நடக்கும் திருவாரூர், மன்னார்குடி பகுதியில் அதிக ராணுவத்தினர் இருந்தனர்.
திருவாரூரில் 1000 ராணுவத்தினர் வரை உள்ளனர். முக்கியமாக மாநில அரசுக்கு அறிவிக்காமல் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். துணை ராணுவத்தினர் வந்ததால் மக்களிடையே பதட்டம் நிலவி வந்தனர்.
மாநில அரசுக்கு அறிவிக்காமல் துணை ராணுவத்தினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பெரிய எதிர்ப்பு நிலவியதை அடுத்து தற்போது இந்த துணை ராணுவ படை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 2000 வீரர்களும் மீண்டும் தங்கள் படை தளத்திற்கு திரும்பி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஏன் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று தகவல் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications
