For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2000 பேர்.. 5 மாவட்டங்கள்.. டெல்டாவில் எங்கெல்லாம் துணை ராணுவம் களமிறங்கியுள்ளது?

டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிப்பு- வீடியோ

    திருவாரூர்:டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மொத்தமாக 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

    Para Military force has arrived in 5 districts of Delta region in Tamilnadu

    இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மக்கள் போராட்டம் அடிக்கடி நடக்கும் , விவசாய சங்கங்கள் அதிகம் இருக்கும் திருவாரூர் மாவட்டத்தில்தான் இவர்கள் அதிகம் இருந்தனர்.

    திருவாரூரில் மட்டும் சுமார் 1000 ராணுவத்தினர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் மன்னார்குடியிலும், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி போன்ற பகுதியிலும் ராணுவ படை குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் துணை ராணுவம் வந்தது. கேரளா மற்றும் கோவையில் இருந்து இந்த ராணுவம் வந்தது. இவர்கள் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாருர், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    நேற்று இரவே வந்த இவர்கள், இன்று அதிகாலை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்த பிரச்சனை பெரிதானத்தை அடுத்து தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறார்கள். படை குவிக்கப்பட்டது, வாபஸ் பெறப்பட்டது எதற்கும் இப்போதுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    English summary
    Para-Military force arrived in Delta region of Tamilnadu to control people protest against Methane project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X