கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வருகிறது பாராசூட் படை.. கடற்கரையை கண்காணிக்க புதிய திட்டம்
சென்னை : கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக கடற்கரையை ‘பாராசூட்' மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக கடலோர காவல்படை கடலோர பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது ஒரு புதிய திட்டமாக கடற்கரையை பாராசூட் மூலம் கண்காணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று பாராசூட்டில் பறந்தபடியே வீரர் ஒருவர் கடற்கரையை கண்காணிக்கும் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் தமிழக கடலோர காவல்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடற்கரையை சுற்றிவர ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் பாராசூட் இணைக்கப்படும். வாகனம் வேகமாக ஓடத்தொடங்கியதும் பாராசூட் மேலே பறக்கும். அதில் இருக்கும் வீரர் மேலே இருந்தபடி கடற்கரை முழுவதையும் கண்காணிப்பார். அவரது கையில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா மூலம் கடற்கரையில் நடப்பவை பதிவு செய்யப்படும்.
இந்த புதிய திட்டம் குறித்து கடலோர காவல்படை துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
இந்த புதிய திட்டத்தில் கடலோர காவல்படை சிறப்பு கமாண்டோ வீரர்களை பயன்படுத்த இருக்கிறோம். இதற்காக 30 கமாண்டோ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இதன் மூலம் கடலில் தொலைதூரத்தில் ஒருவர் தத்தளித்துக் கொண்டு இருந்தால்கூட அவரை பாராசூட்டில் இருக்கும் வீரர் பார்த்து தகவல் தெரிவிப்பார். கடற்கரை பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் இருப்பதற்காகவும், அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த திட்டம் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications