செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் வாகன நெரிசல்.. சுங்கக் கட்டணம் ரத்து
செங்கல்பட்டு: சென்னையிலிருந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரனூர் சுங்கச் சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 35,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் முழு ஊரடங்கால் சென்னையிலிருந்து ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் வெளியேறி வருகிறார்கள். மேலும் சிலரோ சிறிய லாரி போன்ற வாகனங்களில் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
நாளை முதல் அமலாகிறது என்பதால் இன்று சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக ஏராளமானோர் வெளியேறுகிறார்கள். இதனால் பரனூர் சுங்கச் சாவடியில் 2 கி.மூ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த வாகன நெரிசலால் சுங்கக் கட்டணங்களை வாங்க முடியாமல் டோல்கேட் ஊழியர்கள் திணறினர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் பரனூர் டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications