இதய ஓட்டையால் அவதிப்பட்டு பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்!
பிறந்த குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் இந்த பெற்றோருக்கு உதவுங்கள்.
சென்னை: பிறந்த குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் இந்த பெற்றோருக்கு உதவுங்கள்.
என் 11 மாத பிஞ்சு குழந்தை கடந்த 7 மாதங்களாகப் போராடி வருகிறது. அவளால் வெகுநேரம் கண்ணை விழித்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அவளால் ஒரு வேளை உணவை கூட சாப்பிட முடியவில்லை. கொஞ்சமாக உணவை உட்கொண்டால் கூட வாந்தி வந்து விடுகிறது. இதனால் அவள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விட்டாள். அவள் இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை காரணமாக மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகி வருகிறாள். அவளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர். ஆனால் என்னிடம் இருப்பதோ வெறும் 1000 ரூபாய் கூட கிடையாது. அவளின் அறுவை சிகிச்சைக்குப் போதுமான பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றேன்.
ஒவ்வொரு முறையும் அவளின் அழகான பெரிய கண்களைக் கொண்டு என்னை பார்க்கும் போதெல்லாம் அப்பா எப்படியாவது என்னை காப்பாற்றி விடு என்று அவள் கூறுவது போன்று தான் எனக்கு தோன்றும், அப்பொழுது எல்லாம் இதயம் நொறுங்கிய ஒரு தந்தையாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளை காப்பாற்ற வேண்டும் என்றால் எனக்கு அறுவை சிகிச்சைக்குப் போதிய பணம் தேவைப்படுகிறது என்று கண்ணீருடன் பேசிகிறார் ஷிவானியின் தந்தை.
சிவா மற்றும் ஆஷா இருவருக்கும் போன வருடம் 2017 ஆம் ஆண்டில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆஷா ஒரு தாயாக மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தாள். அவளின் பிஞ்சு குழந்தையின் கருத்த விழிகளை பார்க்கும் போதெல்லாம் சந்தோஷம் அடைந்தாள்.
ஆனால் இந்த சந்தோஷம் சில மாதங்களுக்கு கூட நிலைக்கவில்லை. அந்த பிஞ்சு குழந்தை அடிக்கடி காய்ச்சல் சலதோஷத்தால் அவதிப்பட்டுக் கொண்டே வந்தது. அவளுக்கு அவர்கள் எவ்வளவு தான் மருந்துகள் கொடுத்தும் அவளது நிலைமையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாங்களும் எல்லா மருத்துவமனைக்கும் ஏறி இறங்கி விட்டோம். எண்ணற்ற மருத்துவர்களையும் நாடியும் எதுவும் பலனளிக்கவில்லை.
அவள் 8 மாதக் குழந்தையாக இருக்கும் போது அப்படியே நிமோனியாவும் தொற்றிக் கொண்டது. அவளை உடனடியாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதித்தோம். அங்கு கொடுத்த சிகச்சைகளும் அவளுக்கு போதுமான தாக இல்லை. நிமோனியா போய் விட்டாலும் அவளது உடம்பு அப்பவும் காய்ச்சலால் கொதித்து கொண்டே இருந்தது. அப்பொழுது தான் மருத்துவர்கள் அவளுக்கு நிறைய பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவளுக்கு பிறப்பு இதயக் கோளாறு இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.
அவளுக்கு இதயத்தில் துளை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் சொன்னதும் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதயத்தில் ஏற்பட்ட வலியுடன் கண்ணீர் தான் வந்தது. அந்த பிஞ்சு குழந்தை எப்படி இத்தனை மாதங்கள் வலியை தாங்கியதோ, என்று நினைக்கும் போதெல்லாம் என்னால் தாங்கிக்கவே முடியாத வலி தான் என் இதயத்தில் நீடிக்கிறது. அவள் பால் அருந்துவதை முற்றிலும் நிறுத்த ஆரம்பித்தாள், சோர்வாக சுருண்டாள், அவளது பிஞ்சு கைகள், பட்டு போன்ற பாதங்கள் எல்லாம் நீல நிறமாக மாறத் தொடங்கியது. மூச்சு கூட விட முடியாமல் திணற ஆரம்பித்தாள்.
அவளது நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றால் அவளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் போதிய பணம் இல்லாமல் இரவு பகல் தூங்காமல் போராடி வருகிறேன். ஒரு பெற்றோராக அவளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் நீங்காமல் இருக்கிறது என்று கூறுகிறார் ஷிவானியின் தாய் ஆஷா.
அவளின் இதய அறுவை சிகிச்சைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஏற்கனவே ஆஷாவும், சிவாவும் ஷிவானியின் பரிசோதனைக்கு, மருந்துக்கு என்று நிறைய செலவழித்து விட்டார்கள். இப்பொழுது அவளை மருத்துவமனையில் அட்மிட் செய்யக் கூட போதிய பணம் அவர்களிடம் இல்லை. இதனால் ஷிவானியை வீட்டில் வைத்து பார்த்து வருகிறார்கள்.
இதயம் சரியாக செயல்படாத காரணத்தால் அவளது உடம்புக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் சோர்வாகி வருகிறாள். இந்த நிலையில் ஷிவானியை இப்படியே வைத்து இருக்க முடியாது. அவளை காப்பாற்ற உடனடியாக 3 லட்சம் ரூபாய் வரை இந்த பெற்றோருக்கு தேவைப்படுகிறது.
நான் டெல்லியில் உள்ள அலி விஹார் என்ற பகுதியில் வசித்து வருகிறேன். நான் ஒரு தொழிலாளி என் மாத வருமானம் வெறும் 10,000 ரூபாய் மட்டுமே. என்னுடைய ஒரு வருமானத்தை கொண்டு தான் என் மனைவி, அம்மா மற்றும் என் குழந்தை யை காப்பாற்றி வருகிறேன். ஷிவானிக்கு இப்படி ஆனதிலிருந்து ஒரு தாயாக ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு பணம் சேமித்து வருகிறாள் என்னுடைய மனைவி . என் மகள் ஒவ்வொரு நொடியும் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறாள். எங்களுக்கு போதிய பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிறைய நம்பிக்கை கொண்டுள்ளோம். எப்படியும் அந்த பிஞ்சு உயிரை காப்பாற்றி விடுவோம் என்று.
இந்த நம்பிக்கை உடன் தான் நிறைய மணி நேரம் வேலை பார்த்து பணம் சேமித்து வருகிறார் ஷிவானியின் தந்தை. ஆஷாவின் நகைகளும் விற்கப்பட்டு ஏற்கனவே மருத்துவ செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தங்களால் முடிந்த முயற்சியை துவண்டு விடாமல் அந்த பெற்றோர் செய்து வருகிறார்கள்.
மனித நேயத்துடன் உதவுங்கள்.
தற்போது ஷிவானியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சையை தொடங்கி ஆக வேண்டும். அவளின் உயிரை காப்பாற்ற போதுமான நேரமும் பணமும் அவர்களிடம் இல்லை. இதனால் அவர்கள் தற்போது நம்மளின் உதவியை நாடி வந்துள்ளார்கள். இந்த பணத்தை திரட்ட அவர்களுக்கு உதவி செய்தால் அந்த பிஞ்சு குழந்தையின் உயிர் காக்கப்படும். உங்களுடைய மனித நேயத்துடான இந்த உதவி அந்த பெற்றோரின் வெற்றிக்கு உதவும். சீக்கிரம் கை கொடுங்கள், உங்கள் உதவிக் கரங்கள் ஒன்று சேரட்டும். நாமும் கடவுளுடன் சேர்ந்து இந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்ற உதவ முற்படுவோம். உங்களின் ஒரு சிறு உதவி இந்த பெற்றோருக்கு பெரிய சந்தோஷத்தை தரும் அவர்களது முகத்தில். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இதைப் பற்றி வாட்ஸ் அப், முகநூல் மூலம் தெரிவிங்கள். இதுவும் நீங்கள் செய்யும் சிறிய உதவியே.
வாருங்கள் உதவி செய்வோம் மனிதநேயத்துடன்!!
இந்த குழந்தைக்கு உதவ நினைத்தால் இந்த லிங்கைகிளிக் செய்யவும்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?
















Click it and Unblock the Notifications