5 மாதக் கைக்குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் - குமரியில் 4 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே 5 மாத ஆண் குழந்தையை ரூபாய் 1 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி அமலா. இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை. கடந்த 31 ஆம் தேதி வரதராஜன், 5 மாத ஆண் குழந்தை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தார். அந்த குழந்தையை தத்தெடுத்து வந்திருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். போதிய உணவு கிடைக்காமலும், சரியாக பராமரிக்காததாலும் அந்த குழந்தை 2 நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகம் கொண்டு நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உதவி மைய அதிகாரி மேரி பெனி நேரில் சென்று விசாரித்தார். அதனையடுத்து வரதராஜன் அந்த குழந்தையை ரூபாய் 1 லட்சத்துக்கு பேரம் பேசி வாங்கி வந்தது தெரியவந்தது. அந்த குழந்தை கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மாரிமணி மாலா தம்பதியினருக்கு சொந்தமானது ஆகும். இவர்களுக்கு சூர்யா என்கின்ற 1 வயது மகனும், நிதிஷ்குமார் என்ற 5 மாத குழந்தையும் இருந்தனர்.
சதீஷ்குமார் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வந்தார். இதில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார். அவரது வறுமையை பயன்படுத்தி புரோக்கர் கும்பல் சதீஷ்குமாரை சந்தித்து பண ஆசை காட்டி உள்ளனர். உனக்கு தான் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளதே 2 ஆவது குழந்தை நிதிஷ்குமாரை விற்று விடு உனக்கு ரூபாய் 1 லட்சம் வாங்கி தருகிறோம் என கூறி இருக்கிறார்கள்.
பண ஆசையில் சதீஷ்குமாரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி வரதராஜன் ரூபாய் 1 லட்சம் கொடுத்து குழந்தை நிதிஷ்குமாரை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் உதவி மைய அதிகாரி மேரிபெனி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் குழந்தையை விற்ற சதீஷ்குமார், அதனை வாங்கிய வரதராஜன், இதற்கு உதவியாக இருந்த அவரது உறவினர் சரவணந்தேரியைச் சேர்ந்த தங்கநாடார், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஆதிலிங்கம், அவரது மனைவி விமலா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சதீஷ்குமார், வரதராஜன், தங்கநாடார், விமலா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிலிங்கம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications