‘தாத்தா’ குடித்த சரக்கின் பெயர் என்ன?... பிளஸ் 2 தேர்வில் ‘மப்பு’ கேள்வி... பெற்றோர் ஷாக்!
சென்னை: பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் மது வகைகள் குறித்த கேள்வி இடம் பெற்றிருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு கடந்த வெள்ளியன்று தேர்வு நடைபெற்றது. அதில், ஒரு மதிப்பெண் வினாக்காளில் ஐந்தாவது கேள்வி மது வகைகள் தொடர்பானதாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, 'முதியவர் பெர்மன் தன், 'மாஸ்டர் பீஸ்' படத்தை வரைந்து கொண்டிருக்கும் போது, எந்த வகை மதுவை அதிகமாக குடித்தார்?' என்பது தான் அக்கேள்வி. இதற்கு பதிலாக, 'ஒயின், ஓட்கா, பீர், ஜின்' என, நான்கு மது வகைகள் அளிக்கப் பட்டிருந்தன. இந்த கேள்விக்கான சரியான விடை, 'ஜின்' ஆகும்.
அதாவது இந்தக் கேள்வி பிளஸ் 2 ஆங்கில பாடத்தின் துணைப்புத்தகத்தில் உள்ள பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். பிரபல எழுத்தாளர் ஓ.ஹென்ரியின் கடைசி இலை எனப்படும் ‘தி லாஸ்ட் லீப்' கதையில், வரும் ஓவியர் தான் இந்த பெர்மன்.
இவர் நிமோனியா பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கடுங்குளிரில் ஜின் அதிகமாக சாப்பிட்டு விட்டு ஓவியம் வரைவார். கடைசியில் அப்பெண்ணைக் காப்பாற்றி விட்டு அவர் இறந்து விடுவார்.
துணைப்பாடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி தான் இது என்றாலும், ஏற்கனவே மதுவால் இளைய சமுதாயம், அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருவதை சமீபகாலமாக நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி தீயசெயல்களில் ஈடுபட வைக்கச் செய்யும் வகையில் இத்தகைய மது குறித்த கேள்விகள் அவசியமானதா என்பதை கல்வியாளர்கள் யோசிக்க வேண்டும்.
இத்தகைய கேள்வி பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றிருந்ததற்கு பெற்றோரும் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications