நீங்கள் இல்லாமல் எங்கள் வெற்றி இல்லை... பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 3.02.2016 அன்றும் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 4.02.2016 அன்றும் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர்க் கழகத் தலைவர் சுகுணா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். இரண்டாம் பருவத்தில் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கல்வித்தரத்தை பெற்றோர்கள் அறியும் பொருட்டு மாணவர் தர அட்டையில் பெற்றோர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மூன்றாவது பருவத்தில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பெற்றோர்களுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டில் ஆங்கில பேச்சு பயிற்சி, தையல் பயிற்சி மற்றும் கையெழுத்து பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்களுடன் விவாதிக்கப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி இணைச் செயல்பாடுகள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமைகள் பெற்றோர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

முடிவில் பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் கோமதி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்,
தலைமை ஆசிரியருக்கு ரோட்டரி விருது
காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் பட்டய நாள் விழாவும், தொழிற்சார் சேவை விருது வழங்கு விழாவும் சங்கத் தலைவர் டி. சுதர்சன் ஸ்ரீனிவாச் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைம ஆசிரியர் ஆ. பீட்டர் ராஜா, அரசு மருத்துவமனை செவிலியர் எம். நந்தினி, சிக்ரி விஞ்ஞானி டாக்டர் டி. ஜெயக்குமார், பிவிஎஸ் நர்சரி கார்டன் வீரையா ஆகியோருக்கு தொழிற்சார் சேவை விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
விருதுகளை மண்டலம் 18ன் துணை ஆளுநர் கே. அன்பரசு வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications