நெல்லை எக்ஸ்பிரஸில் காதை கடித்த எலியால் பயணிகள் பீதி!
நெல்லை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் எலி கடித்ததால் காயமடைந்த சம்பவம் ரயில் பயணிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் அமைந்துள்ள ரயில் நிலையத்திலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் எலிகளின் தொல்லை மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தினர் புகார்களைக் கேட்டறிந்து எலித்தொல்லைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குடும்பத்துடன் பயணம்:
இந்நிலையில் நெல்லை மாவட்டம் சிங்கையை சேர்ந்த மில் ஊழியர் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்துடன் நெல்லை திரும்பிக் கொண்டிருந்தார்.
காதைக் கடித்த எலி:
ரயிலில் படுத்து உறங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்த லாரன்ஸ் திருச்சி அருகே ரயில் வந்தபோது திடீரென்று அலறினார். குடும்பத்தினரும், மற்ற பயணியரும் அதிர்ச்சியுடன் எழுந்து பார்த்தபோது லாரன்ஸின் காதை ஒரு எலியானது கடித்திருந்தது. காதில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக டிக்கெட் பரிசோதகரை அழைத்து விவரத்தைக் கூறினார்கள்.
ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை:
இதனை அடுத்து உரிய சிகிச்சை அளிக்க கோரி லாரன்ஸ் குடும்பத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் திருச்சியில் இருந்து செல்லும் மதுரை ரயிலில் லாரன்ஸை அழைத்துச் சென்று அருகில் அமைந்திருந்த ரயில்வே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
தாமதமாக புறப்பட்ட ரயில்:
சிகிச்சைக்கு பின்பு அவர் மீண்டும் நெல்லை ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் நெல்லை ரயில் கிட்டதட்ட அரைமணி நேரம் தாமதமாக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. ரயிலில் பயணம் செய்த ஒரு பயணியை எலி கடித்துக் குதறிய சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications