ரெண்டு நாளில் இனி பாஸ்போர்ட்? கோவை வெளியிட்ட சூப்பர் ஸ்பீட் Version-2 சேவை!
கோவை: பாஸ்போர்ட் சேவை திட்டத்தில் 'வெர்ஷன் 2' மேம்படுத்தப்பட்ட சேவையானது, விரைவு மற்றும் பாதுகாப்பில் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சேவை உலகத்தில் உள்ள 202 தூதரகங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் மூலம் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் மேலும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது..
Ministry of External Affairs என்று சொல்லக்கூடிய வெளிநாட்டு அமைச்சகம், பாஸ்போர்ட் சேவையை வேகமாகவும், அதேசமயம் வெளிப்படையாகவும் வழங்கி வருகிறது..

பாஸ்போர்ட் சேவா திட்டம்
அரசின் தொலைநோக்கு திட்டமான 'பாஸ்போர்ட் சேவா திட்டம்' (Passport Seva Project - PSP) மூலம், குடிமக்களுக்கு இந்த அதிநவீன, விரைவான பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் எளிதாக பதிவு செய்து, விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்து, கட்டணத்தை செலுத்தி, சேவை மையங்களில் அப்பாயிண்ட்டையும் புக் செய்து கொள்ளலாம்.
அதேபோல mPassport Seva ஆப் அறிமுகமாகியிருப்பதால், ஸ்மார்ட்போன் மூலமாகவே விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம், புதிய பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தட்கல் சேவை
விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ததுமே, நேர்காணல் செய்யப்பட்டுவிடும்.. பிறக வீடு தேடி பாஸ்போர்ட் வரும்.. அதுமட்டுமல்ல, Tatkal சேவையில் பாஸ்போர்ட் ஒன்றிரண்டு நாட்களிலேயே கிடைக்கக்கூடிய வசதியும் உள்ளது.. ஆனால், எக்காரணம் கொண்டும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் தவறான தகவலை தந்துவிடக்கூடாது.
ஒருவேளை பாஸ்போர்ட் தாமதம் அல்லது குறைபாடுகள் குறித்து புகார் ஏதாவது தெரிவிக்க வேண்டுமானால், 1800-258-1800 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. அல்லது CPGRAMS என்ற வெப்சைட்டிலும் குறை தீர்க்கும் வழிமுறைகள் உள்ளன.
பாஸ்போர்ட் - மகிழ்ச்சி தகவல்
இப்படி பாஸ்போர்ட் சேவையில் எண்ணற்ற வசதிகளை அரசு செய்து தந்துவரும் நிலையில், பாஸ்போர்ட் சேவை குறித்து மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது..
இந்தியாவில் 452வது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்றைய தினம் துவங்கப்பட்டது.. இந்த நிகழ்வில், பாஸ்போர்ட் சேவை திட்ட இணைச்செயலாளர் மற்றும் வெளியுறவு அமைச்சக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
452 சேவை மையங்கள்
பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் பேசும்போது, "இந்தியாவில் அனைத்து லோக்சபா தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையங்களை நிறுவுவதே எமது இலக்காகும். இதுவரை 452 மையங்கள் தொடங்கியுள்ளன. மேலும் 32 தொகுதிகளில் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
இந்தியாவில் வருடந்தோறும் 1.50 கோடி பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இ - பாஸ்போர்ட் நடைமுறைக்கு வந்துள்ளது.
கோவையில் வெர்ஷன் 2 - ஆரம்பம்
இதில், ஒரு மின்னணு "சிப்" பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல் சேமித்து வைக்கப்படுகிறது... குறிப்பாக சிப்பில் டிஜிட்டல் கையொப்பத்துடன் தகவல்களும் இருக்கும் என்பதால், அத்தகவல்களை திருத்துவது அல்லது போலி பாஸ்போர்ட்டுகளை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதால், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது..
பாஸ்போர்ட் சேவை திட்டம், நடப்பு வருடம் முதல், "வெர்ஷன் 2" ஆக, மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், உலகிலுள்ள 202 தூதரகங்களிலும் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications