Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பத்தூரில் சுற்றிலும் அத்தனை பேர்.. அசிங்கமாக சிக்கிய கயல்விழி.. போலி பட்டாவா? இதெல்லாம் தேவையா

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நடந்த மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
வீடு, நிலம், என எந்தவிதமான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டாக்கள் மிகவும் அவசியம்.. உரிமையாளர்கள் எந்நேரமும் தங்கள் கையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஆவணம் இதுவாகும்.

சொத்துக்கள்: இதுபோன்ற பட்டா இருந்தால்தான், ஒருவரின் சொத்துக்கள் உரிமையானது என்பதற்கு அத்தாட்சியாகும். இந்த பட்டாவில், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் அனைத்துமே பதிவாகியிருக்கும்.

Patta Change in Tirupattur and what happened to the 2 clerks Tirupathur in the Registrar Office

இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவில், மோசடிகள் நடப்பது அதிகரித்துவிட்டது.. போலியான பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன..

போலி பத்திரங்கள்: போலி பத்திரங்களை பயன்படுத்தி, இந்த மோசடிகள் நடந்து வருகின்றன.. இதனை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், பல்வேறு அதிரடிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.. மற்றொருபுறம் போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதனால் முன்பைவிட, இப்போது போலி ஆவணங்களின் நடமாட்டங்கள் கட்டுக்குள் வந்துள்ளன.. அதேபோல, மோசடியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தவறுகள் நிரூபணமான நிலையில், உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.

கயல்விழி: இதோ நேற்றுகூட திருப்பத்தூரில் 2 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. திருப்பத்தூரை சேர்ந்த கயல்விழி என்பவர், ஆயிஷா என்பவருக்கு சொந்தமான, 1,800 சதுர அடி இடத்தை ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒரு நபருக்கு பத்திரப்பதிவு செய்து தந்தாராம்.. மாவட்ட பதிவாளர் விசாரணையில் இறங்கியபோதுதான், இப்படி ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது..

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, பத்திரப்பதிவு ஆவண எழுத்தர், கொரட்டி கிராமத்தை சேர்ந்த மணியின் உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட பதிவாளர் பிரகாஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

ஜோலார்பேட்டை: அதுபோலவே, ஜோலார்பேட்டையை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவியின் சொத்தை, அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் பெயரில், ஆள்மாறாட்டம் செய்து கடந்த, 2007ம் ஆண்டு, ஜோலார்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாக புகார் கிளம்பியது..

இதுகுறித்த விசாரணையும் முறையாக நடைபெற்றதையடுத்து, இந்த மோசடி உறுதியானது. இதையடுத்து, அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, உடந்தையாக இருந்த, பத்திரப்பதிவு ஆவண எழுத்தர் சிரஞ்சீவியின் உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட பதிவாளர் பிரகாஷ் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த பத்திரப்பதிவுக்கு துணை போன சார் - பதிவாளர்கள் 2 பேரையும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., அலுவலகத்திற்கு பரிந்துரைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

வார்னிங்: அதுமட்டுமல்ல, பத்திர எழுத்தர்கள், ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணங்களை வைத்து, பத்திரப்பதிவு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசில் புகார் அளித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்ட பதிவாளர் பிரகாஷ். ஒரே நேரத்தில் நடந்த இந்த கைது நடவடிக்கைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+