ஆ ஊன்னா கட்டிப்புடிச்சே கடுப்பேற்றும் ஜூலி.. செம டென்ஷனில் குடும்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதில் முதலில் இடம் பிடித்த ஜூலியானா தற்போது தனது செயல்களால் மக்களின் அதிருப்தியை குவிக்க ஆரம்பித்துள்ளாராம்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் 15 போட்டியாளர்களில் மக்களை மிகவும் கவர்ந்தவர் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியானா.

இவரிடம் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமும், அதிமுகவை சேர்ந்த ஆர்த்தியும் ஜல்லிக்கட்டு குறித்தும் அதில் மோடி, சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களை நேரடியாக விமர்சித்தது குறித்தும் கண்டனம் தெரிவித்தும் மோதலை சூடாக்கினர்.

 மக்களின் பரிதாபங்கள்

மக்களின் பரிதாபங்கள்

இதனால் ஜல்லிக்கட்டு போராளியை காயத்ரியும், ஆர்த்தியும் வாட்டி வதைக்கிறார்களே என்று சமூக வலைதளங்களில் மக்கள் கண்டனக் கணைகளை தொடுத்து வந்தனர். ஆனால் கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று எப்போது ஸ்ரீயிடம் ஜூலி தெரிவித்தாரோ அன்று முதல் அவர் பெயர் டோட்டல் டேமேஜ் ஆனது.

 தேவையற்ற நடவடிக்கைகள்

தேவையற்ற நடவடிக்கைகள்

ஜூலியின் அசட்டு சிரிப்பும், குறு குறு பார்வையும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கும் விதமும் அங்கிருந்த போட்டியாளரை மட்டுமல்ல, பார்ப்போரையும் முகம் சுளிக்க வைத்தது. அதன்பின்னர் பரணியை அண்ணா அண்ணா என்று அழைத்த ஜூலியும், மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து பரணி இந்த வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றார்.

Jallikattu Fame Juliana Got into Controversy in the Bigboss Show- Oneindia Tamil
 கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

பெண் போட்டியாளர்களின் அரைகுறை ஆடை குறித்து கஞ்சா கருப்பு பேசியது, நமீதாவின் ..... பிடித்துக் கொண்டு பரணி போகிறார் என்று கஞ்சா கருப்பு நமீதாவையும், பரணியையும் மிக கேவலமாக பேசியது, பரணியை கொல்லும் அளவுக்கு சென்றது உள்ளிட்ட கேவலமான செயல்களில் ஈடுபட்ட கஞ்சா கருப்பு நல்லவராக போய்விட்டார். ஆனால் பரணி கெட்டவராக சித்தரிக்கப்பட்டு விட்டார்.

 அப்பா மாதிரி

அப்பா மாதிரி

போட்டியாளர் ஆரவை பார்த்தால் எனக்கு அப்பா ஞாபகம் வருகிறது என்று கூறிய ஜூலியானா, காயத்ரியிடம் ஆரவை பார்த்தால் எனக்கு ஒரு மாதிரி ஃபீலிங் வருகிறது என்றார். அப்பா மாதிரி இருக்கிறார் என்று கூறிவிட்டு ஆரவ்விடம் ஜொள்ளு விட்டு கொல்லும் ஜூலியானா பரணியை ஆதரிக்கவில்லை.

 கட்டிப்பிடிப்பது, கண்ணீர் சிந்துவது

கட்டிப்பிடிப்பது, கண்ணீர் சிந்துவது

ஆ ஊன்னா ஆண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்தும், கண்ணீர் சிந்தியும் நிகழ்ச்சி பார்ப்பவர்களை கடுப்பேற்றி வருகிறார் ஜூலியானா. ஜல்லிக்கட்டில் போராடிய வீர தமிழச்சி என்றெல்லாம் பாராட்டப்பட்ட அவர் தற்போது மலிவான விளம்பரத்துக்காக இதுபோல் சினேகன், சக்தி, ஆரவ் (வையாபுரியை தவிர்த்து) ஆகியோரை கட்டி பிடித்து வருகிறார். இது மக்களுக்கு எரிச்சலை தருகிறது. நல்ல உறவுகளை கட்டிப்பிடிக்கும் விதமே வேறு, ஆனால் இவரோ எல்லாரையும் ஒரே மாதிரியாக கட்டிப்பிடிக்கிறார்.

 போலித்தனமான பேச்சு

போலித்தனமான பேச்சு

ஆளுக்கு தகுந்தாற்போல் ஜால்ரா போட்டு, ஒருவர் மீது மற்றொருவரிடம் குறை சொல்வது அந்த நபர் மீது வேறொருவரிடம் குறை சொல்வது உள்ளிட்ட செயல்களில் ஜூலி ஈடுபட்டு வருகிறார். எலிமினேஷன் லிஸ்ட்டில் யாருடைய பெயர் அதிகம் அடிபடுகிறதோ அவருடன் நன்கு பழகியிருந்தாலும் விலகிவிடுகிறார். இப்படி நேரத்துக்கு தகுந்தாற்போல் நிறம் மாறுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

 ஜூலி வெளியேற வேண்டும்

ஜூலி வெளியேற வேண்டும்

ஆர்த்தியுடன் ஜூலியும் பெட்டி படுக்கையுடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ட்விஸ்ட்டாக ஜூலி தப்பிவிட்டார். ஆனால் அவர் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது. அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் கூற ஆரம்பித்து விட்டனர். பார்க்கலாம்.. அடுத்து போகப் போவது யார் என்று.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People who are watching Bigg boss disappoints over Juliana's action.
Please Wait while comments are loading...