திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றிரவு தங்க வேண்டாம்- பக்தர்களுக்கு காவல் துறை அறிவுரை
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் கடற்கரையில் இன்று இரவு தங்க வேண்டாம் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்று பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்கி, நாளை காலை குளித்துவிட்டு முருகனை தரிசித்துவிட்டு செல்வர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது பெய்து கொண்டே இருப்பதால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க இயலாது.
எனவே இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். அந்த வகையில் அண்மைக்காலமாக திருச்செந்தூர் முருகன் கோயிலின் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்கி மறுநாள் அங்குள்ள கடலிலும் கிணற்றிலும் புனிதநீராடிவிட்டு முருகனை தரிசித்துவிட்டு பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய தினம் ஐப்பசி மாத பவுர்ணமி, அது போல் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு குவிந்தனர். இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் இரவு யாரும் தங்காமல் பாதுகாப்பான இடங்களில் தங்கி காலையில் சுவாமியை தரிசிக்கலாம் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம் குறைந்தது. அண்மையில் கடற்கரையில் இருந்து ஜெல்லி மீன்கள் கரைக்கு வருவதால் மக்கள் யாரும் கடற்கரையில் குளிக்க வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தினர். இந்த மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications