"ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸ்... சல்மான் கான் கேஸ் போல ஆகாமல் இருந்தால் சரி!
சென்னை: சல்மான் கான் கார் விபத்து வழக்கிலிருந்து தப்பித்த கதை போல "ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸும் ஆகி விடாமல் போலீஸார் தீவிரமாக நடந்து கொண்டால் நல்லது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிந்றனர்.
ஐஸ்வர்யா குடிபோதையில் காரை பேய் போல ஓட்டி முனுசாமி என்ற காவலாளியைக் கொன்று தீர்த்து விட்டு இப்போது சிறைக்குப் போய் விட்டார். ஆனால் நாதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த அப்பாவி முனுசாமியின் குடும்பம். இரண்டு குழந்தைகளுடன் முனுசாமியின் மனைவி பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார். அவருக்கு உதவக் கூட யாரும் வரவில்லையாம்.

திருவான்மியூரைச் சேர்ந்தவர் முனுசாமி. காவலாளியாக பணியாற்றி வந்தார். பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் தனது தோழிகளுடன் ஆடி காரை படு வேகமாக ஓட்டி வந்தார் ஐஸ்வர்யா. குடிபோதையில் அதி வேகமாக வந்த அவர் முனுசாமி மீது மோதி தள்ளி விட்டு போயுள்ளார்.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த சிலர் தங்களது வாகனங்களில் சேஸ் செய்து ஐஸ்வர்யா காரை துரத்திப் பிடித்து தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது அவரது குடும்பம். அவர் மட்டும்தான் குடும்பத்திற்காக உழைத்து வந்தார். அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் முனுசாமி. ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாராம். உழைத்துக் கொண்டே இருப்பாராம் தனது குடும்பத்திற்காக. வாட்ச்மேன் வேலை, லோடுமேன் வேலை என எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் அவர்.
எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்று இருந்து வந்துள்ளார். ஆனால் இன்று அவரது குடும்பத்துக்கு உதவிக்குக் கூட யாரும் வராத நிலையாம்.
இப்போது அப்பகுதி மக்களின் ஒரே எதிர்பாப்பு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்., சல்மான் கான் வழக்கு போல இல்லாமல், ஆடி கார் ஐஸ்வர்யா வழக்கை எந்தவிதமான பண நிர்ப்பந்தத்துக்கும் அடி பணியாமல் போலீஸார் தீவிரமாக நடத்தி அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரிடமிருந்து முனுசாமி குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications