கடையத்தில் மீண்டும் சிறுத்தையின் அட்டகாசம் – அச்சத்தில் பொதுமக்கள்!
கடையம்: கடையம் அருகே பெத்தான் பிள்ளை எனும் குடியிருப்பு கிராமத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட்டதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடையம் அருகே பொது மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஒன்று அக்டோபர் 3 ஆம் தேதி பிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு ராசு என்பவரது வீட்டில் உள்ள இரண்டு நாய்களை பிடித்துச் சென்றுள்ளது. மேலும், இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மணிகண்டன் என்பவரது வீட்டின் தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை சுமார் 200 அடி தூரம் இழுத்துச் சென்று கடித்துக் குதறி தப்பிவிட்டது.
இதனைப் பார்த்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள், கிராமத்துக்குள் சிறுத்தை வந்து சென்றுள்ளதை உறுதி செய்தனர்.
கால்நடைகளுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகள் மற்றும் மனிதர்களின் நிலை என்னவாகும் என்று அச்சத்தில் உள்ள மக்கள், உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications