நம்ம உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்குப் பிறகு.. அப்படியே ராகுல் மாதிரியே பேசும் 'கேப்டன்'!
சென்னை: தேமுதிகவின் உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்குப் பிறகு மக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகா்த் அறிக்கை விட்டுள்ளார்.
ஏற்கனவே விஜயகாந்த் கட்சியின் இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அவர் தெளிவான முடிவை அறிவிக்காததற்காக பல கட்சிகள் கவலையும், அதிருப்தியும் அடைந்துள்ளன.
இந்த நிலையில், எந்தக் கேள்வி கேட்டாலும், எ்ம்பவர்மென்ட், பஞ்சாயத்தி ராஜ், தி சிஸ்டம் என்று சமீபத்தில் டிவி பேட்டியின்போது ராகுல் காந்தி அடிக்கடி பேசி அத்தனை பேரையும் டென்ஷனாக்கியது போல தேமுதிக மாநாட்டால் மக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு வந்து விட்டதாக விஜயகாந்த் கூறியுள்ளார்.
அறிக்கையைப் படியுங்கள்...

வரலாறு காணாத வகையில் கூடினோம்
தேமுதிக சார்பில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை, எறஞ்சியில் நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் வரலாறு காணாத வகையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.

விழிப்புணர்வை அதிகரித்துள்ளது
இன்று நம் தேசத்தில் மக்களை பெரிதும் பாதிக்கும் லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றிட உறுதி கொண்டு, 50 லட்சம் தொண்டர்கள் ஒன்று கூடி இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை இன்னும் அதிகரித்து இருக்கிறது.

இருப்பதால்தான் மாநாடு நடத்தினோம்
இன்று நாம் அனைவரும் ஊழலை எதிர்க்கின்ற இடத்தில் இருக்கிற காரணத்தினால் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. ஊழலை ஒழிப்பதற்கான ஆட்சி அதிகாரம் நமது கைகளில் வருகின்றபோது, ஊழலை ஒழித்து மக்களுக்கான நல்லாட்சியை தேமுதிக தரும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்து இருக்கிறது.

எல்லோருக்கும் நன்றி...
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மிக சிறப்பான முறையில் பல லட்சக்கணக்கானவர்களை மாநாட்டில் கலந்துகொள்ள செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications