பெண்கள் மீது தாக்குதல்.. ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு.. திருப்பூரில் மீண்டும் உண்ணாவிரதம்
பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக்கோரி திருப்பூர் சாமளாபுரத்தில் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக்கோரி திருப்பூர் சாமளாபுரத்தில் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் போலீஸின் தடியடியைக் கண்டித்து சாமளாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடையடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
பெண்கள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை கையால் ஓங்கி அறைந்தார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

பாண்டியராஜனை பணிநீக்கம் செய்க..
போலீசாரின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

அதிகாலையில் கைது
போராட்டக்காரர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்றிரவு திருப்பூர் சாமளாபுரத்தில் நேற்றிரவு உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் 27 பேர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் உண்ணா விரதம்
இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காவல்துறையைக் கண்டித்து கடையடைப்பு
மேலும் காவல்துறையின் தடியடி துஷ்பிரயோகத்தைக் கண்டித்து சாமளாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. போலீசாருக்கு எதிரான மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications