நெருங்கும் பொங்கல்... கரும்புகளை வாங்க ஆள் இல்லை... காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் பகுதியில் விவசாயிகள் கரும்புகளை பயிரிட்டுள்ளனர். ஆனால் கரும்புகளை வாங்க ஆள் இல்லாததால் அவர்கள் வயல் வெளியிலேயே காத்திருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சை : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. ஆனால் இதுவரை கரும்புகளை கொள்முதல் செய்ய யாரும் வராததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பு, மண்பானை, பச்சரிசி பொங்கல் தான் சிறப்பு.

People not interested to buy sugar cane in Thanjavur

தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி கரும்பு விவசாயம் செய்துள்ளனர். பொங்கல் திருநாளை நம்பி பயிரிட்டதால் கரும்புகள் தற்போது கொள்முதலுக்கு தயாராக உள்ளன.

ஆனால் இதுவரை கரும்புகளை வாங்க யாரும் வராததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கான பணிகள் வீட்டில் தொடங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வயல்வெளியில் வளர்ந்து நிற்கும் கரும்புகளை பார்த்து யாராவது கொள்முதல் செய்ய வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துள்ள விவசாயிகள் வணிகர்களின் வருகைக்காக வயல்வெளியிலேயே காத்திருக்கின்றனர்.

கடன் வாங்கி சாகுபடி செதுள்ள நிலையில் இப்படி கொள்முதல் செய்யப்படாமல் இருந்தால் பெரும் நஷ்டத்தைதான் சந்திக்க வேண்டிவரும் என்றம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.ரூபாய் நோட்டு பிரச்சனையும் கரும்பு கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+