தூத்துக்குடிமறை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது- பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க பொதுமக்கள் டும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னேற்பாடாக தற்போது இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், ஏரல், நாட்டார்குளம், மலையன்குளம் உள்ளிட்ட 4 கிராமங்களை நெல்லை மாவட்டம் வள்ளியூர் மண்டலத்துடன் இணைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்வத மக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ரவீந்திரன் தலைமையில் வாகனங்கள் மூலம் தூத்துக்குடி சின்னகோவில் வாளகத்திற்கு திரண்டு வந்தனர். அங்குள்ள கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் இல்லத்தை அனைவரும் முற்றுகையிட்டனர்.
அப்போது மறை மாவட்டத்தை பிரிப்பது குறித்து குருக்கள் மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கலந்து ஆலோசிக்காமல் அவசர கோலத்தில் பிரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அங்கு மறை மாவட்ட ஆயர் இல்லாததால் ஆயரின் பிரதிநிதியிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த முற்றுகை காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications