சுங்கசாவடி தகர்த்த சோழன் #வேல்முருகன்.. குவியும் வாழ்த்துகள்!
சுங்கச்சாவடியை சூறையாடிய வேல்முருகனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், தவாகவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இதனால் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வேல்முருகனின் போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.
|
அதிரடியான போராட்டம்
வேல்முருகனின் போராட்டத்திற்கு மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பதிவிட்டுவருகிறார்கள். ஒரு ட்விட்டரில் பதிவில், போராட்டம் என்றால் இதுதான் போராட்டம்.. இது போன்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தமிழர்கள் முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
இதுதான் இந்திய சட்டமா ?
தமிழர்கள் என்றால் மத்திய அரசு எப்போதும் கிள்ளுக்கீரையாக பார்க்கிறது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டு இருக்கிறதா என்று இன்னொரு பதிவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
|
வாழ்த்துகள் வேல்முருகன்
தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாம் வழக்கு, பின் விளைவுகள் என்று பயந்து கொண்டு இருக்கும்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செய்திருப்பது தரமான சம்பவம் என்றும், வேல்முருகனுக்கு வாழ்த்துகளும் என்றும் ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
வரி மறுப்பது சரிதான்
இன்னொரு ட்விட்டரில் பதிவில், நீதி மறுப்பதும், நீர் மறுப்பதும் தான் வன்முறை. வரி மறுப்பது அல்ல ; எங்களுக்கு நீர் இல்லையென்றால் உங்களுக்கு வரி இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.
|
சுங்கச்சாவடி தகர்த்த சோழன்
இன்னொரு ட்விட்டர் பதிவில், அன்றைய சோழன் சுங்கம் தவிர்த்தான். இன்றைய சோழன் சுங்கம் தகர்த்தான் என்றும் வேல்முருகனைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். வேல்முருகனின் இந்தப் போராட்டத்தால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications