ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 'யாகம்' நடத்திய அலங்காநல்லூர் மக்கள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையை நீக்கக்கோரி மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கோரி அலங்காநல்லூரில் பொதுமக்கள் கோபூஜை, மற்றும் யாகசாலை நடத்துவது உள்ளிட்ட நூதன போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை விளக்கு பூஜை நடத்தவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதுதொடர்பான வழக்க உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. வரும் பொங்கல் திருநாளுக்காவது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கோரி மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் வாடிவாசல் அருகே கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜை நடத்தினர். இன்று மாலை விளக்கு பூஜை நடத்த அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications