பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தது: வீடுகளுக்கு திரும்பும் மக்கள்
சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துவிட்டதால் மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளில் குடியேற தயாராகி வருகிறார்கள்.
வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
சிலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வெள்ளநீரில் மூழ்கி பலியாகினர்.

வெள்ளநீர்
வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துவிட்டது. இந்நிலையில் தென்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் வடிந்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.

வீடுகள்
வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் தற்போது நீர் வடிந்துவிட்டதால் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தயாராகி வருகிறார்கள்.

சுத்தம்
வெள்ளநீர் புகுந்ததால் சகதியும், குப்பையுமாக இருக்கும் வீடுகளை மக்கள் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவி வருகிறார்கள். நீரில் மூழ்கிய பிறகும் நல்ல நிலையில் இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்து சுத்தம் செய்து வருகிறார்கள்.

நந்தம்பாக்கம்
நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். தற்போது நீர் வடிந்துவிட்ட நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

குப்பை
சென்னை நகர சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தன்னார்வலர்கள், அரசு பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications