தீபாவளி.. தமிழகத்தில் விடிய விடிய எங்கெல்லாம் இன்று ஷாப்பிங் செய்யலாம் தெரியுமா?
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்று இரவு விடிய விடிய கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதும் என்பதால் அந்த பகுதிகள் வண்ண விளக்குகளால் ஜெகஜோதியாக காட்சியளிக்கின்றன.
நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஷாப்பிங் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் சில வணிக வீதிகள் இருக்கும். அதில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சென்னை, ரங்கநாதன் தெரு மற்றும் தி.நகர் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று இரவுவரையும் கூட்டம் அலைமோதும். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.நகர் வரை போக கஷ்டப்படுவோருக்கு தாம்பரம், சண்முகா சாலை இருக்கவே இருக்கிறதே. அங்கும் இன்று இரவு விடிய விடிய கூட்டம் இருக்கும்.
இதேபோல சேலத்தில் சின்னக்கடை வீதியில் கூட்டம் கடந்த சில நாட்களாகவே அலைமோதுகிறது. இன்று இரவு வரை அங்கு கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில், ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி ஆகிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தஞ்சாவூர் நகரில் காந்தி சாலை பகுதியில் குவிந்துள்ள வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. தூங்கா நகரம் மதுரை தீபாவளியன்றும் தூங்காமல்தான் இயங்குகிறது. விளக்குத்தூண் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருச்சியில் என்ஸ்கே போஸ் சாலையில், தீபாவளி பர்சேஸ் களை கட்டி வருகிறது. நெல்லையில், ஷாப்பிங்கிற்கு பெயர் பெற்ற டவுன் ஏரியாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நகைகள், ஆடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரின் ஜெயநகர், சிவாஜிநகர், சிக்பேட்டை பகுதிகளிலும், சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியிலும் கூட்டம் அலை மோதுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications