'அரசியல்வாதி' சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது: தா. பாண்டியன்
சசிகலாவுக்கு மகக்ள் ஆதரவு இருக்கிறது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவை நேற்று தா. பாண்டியன் சந்தித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியல்வாதி சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் சசிகலாவை நேற்று தா. பாண்டியன் துயரம் தோய்ந்த முகத்துடன் சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு சசிகலாவிடம் தா. பாண்டியன் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:
ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை.
அதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள்.
சசிகலாவுக்கு பின்னால் மக்களின் சக்தி இருக்கிறது.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications