ஏடிஎம் மையங்களில் அரை மணி நேர இடைவெளியில் 2 முறை பணம் எடுக்க சூப்பர் ஐடியா!
ஏடிஎம் மையங்களில் உடனுக்குடன் பணம் எடுக்க ஒரு புதிய ஐடியாவை பின்பற்றி வருகிறார்கள் பொதுமக்கள்.
சென்னை: பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து ஏடிஎம் மையங்களில் ஒரு கார்டுக்கு ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.2500 மட்டும் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் மையங்களில் நீண்ட கியூ காணப்படுகிறது.
பலர் பணமின்றி வீடு திரும்பியும் உள்ளனர். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் இரவு பகல் பாராமல் அலைந்து திரிந்து வருகின்றனர்.

வெயிலில் பல மணி நேரம் காத்திருந்து ரூ.2500 எடுத்தாலும், அது அத்தியாவசிய செலவுகளுக்கு போதாத நிலையாக உள்ளது. இதையடுத்து மக்கள், இரண்டு முறை பணம் எடுக்கும் ஐடியாவில் இறங்கியுள்ளனர் பொதுமக்கள்.
இரவு 11.30 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு செல்லும் சிலர், முதலில் ரூ.2500 எடுத்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீண்டும் ஒரு ரூ.2500 எடுத்துக்கொள்கிறார்கள். இரவு 12 மணி தாண்டியதும், மறுநாள் கணக்கில் வந்துவிடும் என்பதால் உடனுக்குடன் மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications