அனிதா செத்துருச்சு.. நாம தோத்துட்டோம்.. கோபத்தில் குமுறும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிதா செத்துப் போய் விட்டார். நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று மக்கள் தங்களது கோபத்தை அடக்க முடியாமல் குமுறிக் கொண்டுள்ளனர்.

அனிதாவின் மரணம் தமிழகத்தில் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்துள்ளது. கண் முன்பாகவே அனிதாவைப் பறி கொடுத்த விரக்தி மக்களை நிலை குலைய வைத்துள்ளது.

அனிதாவின் பெற்றோர், குடும்பத்தினரைப் போல தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளது. மக்கள் தங்களது விரக்தி, கோபம், ஆதங்கம், ஆற்றாமையை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

கோபம் கோபமா வருகிறது

கோவம் கோவம் மா வருது. நாம உருவாக்குன அரசு இன்னைக்கு நம்மலயே கொல்லுது. இன்னைக்கு #அனிதா நாளை நான்.

அனிதா போய் விட்டார்.. நாம தோத்துட்டோம்

ஓட்டுக்கு பணம் வாங்காதாவர்களும்., ஓட்டுக்கு பணம் கொடுக்காதவர்களும் மட்டுமே, அனிதாவின் மரணத்தை பற்றி பேச தகுதியானவர்கள்.! #அனிதா
#RIPAnitha

அவரும் இவரும் ஒன்னா?

10 டியூசன் வச்சி நீட் தேர்வுக்கு படிக்கிற பணக்காரர்களும் வறுமையுல படிச்சி நல்லமதிப்பெண் வாங்குன மாணவியும் ஒன்னா. #அனிதா

கற்க முடியாத பாடம்

கற்க முடியாத பாடத்தைக் கற்பித்து விட்டுச் சென்று விட்டாயே அனிதா

அஸ்வின் வருத்தம்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ள கருத்து: Law is very weak for the Strong and very strong for the Weak, in our country. One can never give justice to a shattered dream. #RIPAnitha

புதுவையில் நடந்த போராட்டம்

#NeetKillsAnitha #NEETkilledAnitha #NEET #Anitha protest in #Pondicherry felling sad 😞 RestInPeace. sister #JusticeForAnitha
புதுச்சேரியில் இளைஞர்கள் திரண்டு அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+